ஊராட்சி செயலாளர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பணிக்கான ஊதியம் தமிழக அரசு உத்தரவு

வேலூர், பிப்.26: உள்ளாட்சி தேர்தல் பணியாற்றிய ஊராட்சி செயலர்களுக்கு அதற்கான ஊதியம் வழங்குவதற்காக தமிழக அரசு ₹8.18 லட்சம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த 27 மாவட்டங்களில் கிராம ஊராட்சிகளில் தேர்தல் பணியாற்றிய ஊராட்சி செயலாளர்களுக்கு அதற்கான ஊதியம் தேர்தல் செலவின ஒதுக்கீட்டில் இருந்து பிரித்து வழங்கப்படும்.

அதன்படி, உள்ளாட்சி தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 9 ஆயிரத்து 624 ஊராட்சிகளின் செயலாளர்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 50 சதவீதம் தொடங்கி அதிகபட்சமாக ₹17 ஆயிரம் வரை தேர்தல் பணிக்கான ஊதியமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் என அந்தந்த மாவட்டங்களின் ஊராட்சிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ₹8 கோடியே 18 லட்சத்து 4 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் ஒன்றியங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வழியாக ஊராட்சி செயலர்களின் வங்கி கணக்கில் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 ஊராட்சிகளின் செயலாளர்களுக்கு வழங்க ₹73 லட்சத்து 10 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories: