வாழப்பாடி அருகே பெண்ணிடம் சில்மிஷம் செய்த அரசு பள்ளி சமையலர் கைது

வாழப்பாடி, பிப். 26:  வாழப்பாடி அருகே, விவசாய தோட்டத்தில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட, அரசு பள்ளி சமையலரை, கரியகோயில் போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள கரியகோயில் செம்பருத்தி செம்பரகை கிராமத்தில் மலைவாழ் அரசு துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஆத்தூர் அடுத்த காட்டுக்கோட்டையை சேர்ந்த பெரியசாமி மகன் ராமஜெயம் (32) என்பவர் சமையலராக வேலை பார்த்து வருகிறார். 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமான ராமஜெயத்துக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது.

Advertising
Advertising

இந்நிலையில் நேற்று குடிபோதையில் பள்ளிக்கு வந்த ராமஜெயம், பள்ளியின் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் தனியாக இருந்த சேகர் என்பவரின் மனைவி முத்துலட்சுமி (29) இடம் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி, அவரிடம் இருந்து தப்பி சென்று, நடந்ததை கணவர் சேகரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இதுகுறித்து முத்துலட்சுமி கரியகோயில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், முத்துலட்சுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி சமையலர் ராமஜெயத்தை கைது செய்து, ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: