×

தமிழர் பண்பாட்டு கலாசார பேரவை செயற்குழு கூட்டம்

அவிநாசி,பிப். 26: தமிழர் பண்பாட்டு கலாசார பேரவை அறக்கட்டளை  செயற்குழுக்கூட்டம் அவிநாசியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரவையின் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் செயலாளர்கள் அந்தோணிசாமி, அருணாசலம், வெங்கடாசலம், பொருளாளர்  ராயப்பன், துணை தலைவர்கள் அப்புசாமி, சாமிநாதன், பணி நிறைவு ஆசிரியர்  கூட்டமைப்பின் மாநிலத்தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் கூட்டத்தில்  பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில்,  தமிழகத்தில் எங்கும் தமிழ்,  எதிலும் தமிழ் என்கிற உன்னத நிலைக்கு தாய்மொழியாம் தமிழை தழைத்தோங்க செய்ய  வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்திற்காகவும், தமிழே ஆட்சி மொழி என்பதை  தமிழக அரசு அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக தொடக்க,  நடுநிலை, உயர்நிலை மற்றும் கல்லூரி கல்விகளில் தமிழ்  வழிக்கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் தமிழே கற்றுத்தராத  பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடம் கற்றுத்தர செய்ய வேண்டும்.

தமிழக அரசின்  அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் பிற கோயில்களிலும்  குடமுழக்கு வழிபாடுகள் ஆகிய நிலைகளில் தமிழையே பயன்படுத்த வேண்டும். தமிழ்  மொழி ஆணையம் அமைக்க வேண்டும்.  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி வரும் 29ம் ேததி  கோவை சிவானந்தா காலனியில் பேரூராதீனம்  சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில், கவிஞர் பாலசுப்பிரமணியம்,  புலவர் அப்பாவு ஆகியோர் முன்னிலையில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற உள்ளது.  இந்த போராட்டத்தில் அவிநாசி வட்டாரத்தில் சேவூர், தெக்கலூர், கருவலூர் ஆகிய  பகுதிகளில் இருந்து தமிழர் பண்பாட்டு கலாசார பேரவை  அறக்கட்டளை சார்பில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என்று ஒருமனதாக  தீர்மானிக்கப்பட்டது.


Tags : Tamil Cultural Cultural Council Working Committee Meeting ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...