கடம்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி 29ம் தேதி நடக்கிறது

கெங்கவல்லி, பிப்.26: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த கடம்பூரில் வரும் 29ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.  ஆத்தூர் - கடம்பூர் சாலையில்  உள்ள காலி நிலத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று முன்தினம் குழு தலைவர் லோகநாதன்  தலைமையில் நடந்தது. தொடர்ந்து வாடிவாசல், மாடுபிடி மைதானம், பார்வையாளர் பகுதி உள்ளிட்டவை அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

Advertising
Advertising

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகம் முழுவதுமாக இருந்து 700க்கும் மேற்பட்ட  காளைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான முன்பதிவு, காளைளுக்கு பரிசோதனை விரைவில் துவங்கும். கேலரி  மற்றும் பார்வையாளர் பகுதி அமைக்கும் பணிகள் முடிவடைந்ததும், கலெக்டர் ராமன் நேரில்  ஆய்வு செய்யவுள்ளார் என  கெங்கவல்லி தாசில்தார் சிவக்கொழுந்து தெரிவித்தார்.

Related Stories: