×

ஜலகண்டாபுரத்தில் 2018ம்ஆண்டு காணாமல் போன சேலம் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி கொன்று விசிய கொடூரம்

சேலம், பிப். 26: சேலம் அருகே கடந்த 2018ம் ஆண்டு காணாமல் போன ரியல் எஸ்டேட் அதிபர், கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடலை மேட்டுப்பாளையத்தில் வீசி சென்ற 4 நண்பர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள நாச்சம்பட்டி செலவடையை சேர்ந்தவர் சக்திவேல்(38).ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கு ரேவதி(32) என்ற மனைவியும், சிவப்பிரியா(15)மகளும், தர்ஷன்(12) என்ற மகனும் உள்ளனர். சக்திவேல்,  கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 18ம்தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி ரேவதி, ஜலகண்டாபுரம் போலீசில் புகார் செய்தார். தனது கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும், வெளியே சென்ற அவர் இதுவரை வீடுதிரும்பவில்லை எனவும் கூறியிருந்தார். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசார் தீவிரவிசாரணை மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் அனாதை பிணம் குறித்த தகவலை எடுத்து விசாரித்தனர். இதில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேசன் பகுதிக்குள் 2018ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி, அநாதையாக கிடந்த சடலம் குறித்து விசாரித்தபோது, அது காணாமல் போன ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சக்திவேல் என்பது தெரியவந்தது.

தொடர் விசாரணையில் அவரை அவரது நண்பர் ஈரோட்டை சேர்ந்த சீனி (எ) சீனிவாசன் (42) என்பவர் அழைத்துச்சென்றது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, ரியல் எஸ்டேட் தொழில் செய்த வந்த சக்திவேலிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் அவரை அழைத்துச் சென்றதும், பணம் இல்லை என கூறியதால் நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியதில் அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்தார். சடலத்தை மேட்டுப்பாளையம் பகுதியில் வீசி சென்றதாகவும் கூறினார். இதையடுத்து அவரது  நண்பர் புஷ்பராஜ்(38), திருப்பூர் வெங்கடேசன்(48), முருகபாண்டி(37) ஆகியோரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஜலகண்டாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : murder ,real estate tycoon ,Salem ,Jalakandapuram 2018 ,
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...