×

பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர், பிப். 26:  திருப்பூர் தெற்கு பகுதிகளில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர்  மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் திருப்பூர் தெற்கு  பகுதியான வெள்ளியங்காடு, தென்னம்பாளையம் மார்க்கெட், கஜலட்சுமி தியேட்டர்  பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட பழக்கடைகளில் வாழைப்பழம், மாம்பழம்,  திராட்சை உள்ளிட்ட பழங்களை  மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமண அலுவலகர்  விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினர் நேற்று முன் தினம் திடீரென ஆய்வு  மேற்கொண்டனர். அப்போது பல்வேறு பழக்கடைகளில் செயற்கை முறையில் கற்களை  வைத்து பழுக்க வைத்த aவாழைப்பழம், மாம்பழம் உள்ளிட்டவற்றை 100 கிலோவை  பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், உரிமம் பெறாமல் வியாபாரம் செய்து  வந்த 12 கடைகளும் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்த 2 கடைகளும் நோட்டீஸ்  வழங்கப்பட்டது.

Tags : Inspection ,food safety officers ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...