×

கண்டிபிக்கை சாலை சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

மஞ்சூர், பிப்.26: கண்டிபிக்கை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால்  பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  மஞ்சூர் அருகே உள்ள கண்டிபிக்கை பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். மஞ்சூர் மேல்பஜாரில் இருந்து கண்டிபிக்கை கிராமத்திற்கு செல்லும் சாலை கீழ்குந்தா பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, கூட்டுறவு வங்கி ஆகியவை உள்ளதால் கண்டிபிக்கை சாலையில் வாகன போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் மிகுதியாக உள்ளது. கண்டிபிக்கை சாலையை சீரமைத்து பல ஆண்டுகள் ஆனதால் சாலை மிகவும் பழுதடைந்து மோசமான முறையில் காட்சியளிக்கிறது. சாலையில் பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளதுடன் ஆங்காங்கே குழிகள், பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி குழிகளில் தடுமாறி விழுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் மஞ்சூர் மேல்பஜாரில் இருந்து கண்டிபிக்கை வரை சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Motorists ,road ,
× RELATED திருப்பதிசாரம் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி