×

திருத்தணி அருகே அடிப்படை வசதிகள் இல்லாத இருளர் காலனி

திருத்தணி, பிப். 26: திருத்தணி அடுத்த சத்திரம் ஜெயபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது மேதினிபுரம் கிராமம். இங்குள்ள இருளர் காலனியில்  குடிசை வீடுகளில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இவர்கள் நாள்தோறும் மேதினிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று கூலி வேலை உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தரவேண்டும் என பல அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைத்தும் பயன் இல்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “அரசு வழங்கிய இலவச தொகுப்புகளுக்கு கொடுக்கப்படுகின்ற நிதியானது அந்த வீடு கட்டுவதற்கு போதுமானதாக இல்லை. இதனால், அவர்கள் இந்த வீடுகளை பெற்று கட்டிக் கொள்ள முடியாமல் நிலையில் உள்ளனர். இதனால், இந்த குடிசைகளில் வாழும் மக்கள் மழை மழைக்காலத்தில் கடும் அவதிக்குள்ளாகின்றனர். குடிசைகளில் மழைநீர் புகுந்துவிடும். கோடைகாலத்தில் சுட்டெரிப்பதால் சிரமப்படுகின்றனர்.

குடும்ப அட்டைகள் இல்லாததால் அரசு வழங்கும் சலுகைகளை பெற முடியவில்லை.எனவே, இனிவரும் காலங்களிலாவது ஒவ்வொரு இருளர் காலனியில் வசிக்கின்ற குடும்பத்தினருக்கு அரசே தொகுப்புகள் கட்டித்தர வேண்டும். குடும்ப அட்டைகளுக்கு பெற்றுத்தர வேண்டும்.
ஓய்வூதிய தொகை பெற்று தர வேண்டும். சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் படிப்பறிவு இல்லாத இவர்களுக்கு அந்தப் பகுதியில் முகாமிட்டு ஒவ்வொரு இருளர் காலனியில் மேற்படி வசதிகளை செய்து தர வேண்டும்” என வலியுறுத்துகின்றனர்.

Tags : Irir ,facilities ,Thiruthani ,
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து