×

தனியார் தொழிற்சாலையில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 41 ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம்

திருவள்ளூர், பிப்.26: திருவள்ளூர் அருகே தனியார் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் சாப்பிட்ட உணவில் பல்லி விழுந்ததால் 41 பேருக்கு வாந்தி மயக்கம். ஆபத்தான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் அடுத்த ஒதப்பை கிராமத்தில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை (டிஎம்சி) உள்ளது. இந்த தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், நேற்று முன்தினம் இரவு தொழிற்சாலையில் உள்ள கேன்டீனில் இரவு உணவு சாப்பிட சென்றுள்ளனர்

அப்போது பாலமுருகன் என்பவர் தட்டில் சாம்பாருடன் பல்லியும் சேர்ந்து விழுந்துள்ளது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். சாப்பிடவில்லை. இதற்கிடையே அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கஜபதி, வினோத், கிரி, பாபு, திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜாராம், பென்னலூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த குகன், நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து உள்ளிட்ட 41 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 41 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுகுறித்து பென்னலூர்பேட்டை  காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags : factory ,
× RELATED தெலங்கானாவில் வேதித் தொழிற்சாலையில்...