கோவையில் இளம்பெண் துறவறம் குதிரை வண்டியில் ஊர்வலம்

கோவை, பிப்.26:  கோவையில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் நெகல் குமாரி இன்று துறவறம் மேற்கொள்கிறார். கோவை பூமார்க்கெட் பகுதியை சேர்ந்த பிரவீன் ரங்கா, ராஷிலா ரங்கா தம்பதியின் மகள் நேஹால் குமாரி (22). ஜெயின் சமூதாயத்தை சேர்ந்த பட்டதாரி பெண். இவர் துறவறம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி கோவையில் நடந்தது.இதையொட்டி அவர் பூமார்க்கெட் ெஜயின் கோயிலில் இருந்து குதிரை வண்டியில் ஊர்வலமாக மாநகராட்சி பள்ளி மைதானத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். ஊர்வலத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த துறவறம் மேற்கொள்ளும் நபர்கள் அகிம்சையை கடைப்பிடிக்க வேண்டும். மேலும், பணம் வைத்திருக்கக்கூடாது. மொபைல் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. மகாவீர் வழியில் பயணம் மேற்கொள்ள வேண்டும் உள்பட பல்வேறு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: