ரயிலில் கடத்திய 40 கிலோ கஞ்சா பறிமுதல்

பாலக்காடு பிப். 26:  பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் வழக்கமாக நுழைவு வாயில், ரயில் நிலைய வளாகம், ரயில்களில் அவ்வப்போது  சோதனை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் நேற்று பாலக்காடு ரயில் நிலையத்தில் சோதனை நடந்தது. அங்கு வந்த மங்காலபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சீட்டிற்கு அடியில் 40 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனர். இது தொடர்பாக பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டதில் கஞ்சா கடத்தல்காரர்கள் யாரென தெரியவில்லை. போலீசார் சோதனை இருப்பதை தெரிந்த நபர் கஞ்சாவை விட்டுவிட்டு தப்பியுள்ளார் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட 40 கிலோ கஞ்சா பொட்டலத்தை பாலக்காடு ரேஞ்சு கலால் துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: