×

ஈரோட்டில் விதிமுறை மீறி பயன்படுத்தப்படும் ஏர்ஹாரன்கள்

ஈரோடு, பிப். 26:  ஈரோட்டில் தனியார் பஸ்களில் ஏர்ஹாரன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், இதை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அகற்றாமல் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் சட்டத்திற்கு புறம்பாக வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஈரோட்டில் தனியார் பஸ்களில் இந்த ஏர்ஹாரன்கன் தாராளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது வாகன தணிக்கை என்ற பெயரில் அதிகாரிகள் ஒரு சில பஸ்களில் அகற்றுவதும் பின்னர் கண்டுகொள்ளாமல் விடுவதும் வாடிக்கையாக இருந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஈரோடு மக்கள் நலம் மற்றும் மேம்பாட்டு மையத்தின் தலைவர் கோவிந்தசாமி கூறியதாவது:- பஸ், லாரிகளில் ஏர்ஹாரன்கள் பயன்படுத்துவது குறித்து ஈரோட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஏற்கனவே புகார் அளித்திருந்தேன். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சென்னையில் உள்ள போக்குவரத்து முதன்மை ஆணையர் அலுவலகத்திற்கு புகார் மனு அனுப்பி வைத்தேன். இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பரிந்துரை செய்யப்பட்டது.  ஆனாலும் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியப்போக்கினை கடைபிடித்து வருகின்றனர். விதிமுறையை மீறி பொருத்தப்பட்டுள்ள ஏர்ஹாரன்களை அகற்ற அதிகாரிகள் மறுப்பது ஏன்? என புரியவில்லை. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்துள்ளேன். இவ்வாறு கோவிந்தராஜ் கூறினார்.

Tags : Erode ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!