×

9ம் தேதி இரவு 9 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. தரமற்ற சாலையால் விபத்து அதிகரிப்பு

ஈரோடு, பிப். 26:   தரமற்ற நிலையில் போடப்பட்டுள்ள சாலையால் விபத்துக்கள் அதிக அளவில் நடப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் புகார் தெரிவித்துள்ளது. பவானியில் இருந்து மேட்டூர் செல்லும் சாலையானது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியிடப்பட்டு பல ஆண்டுகளாகியும் இன்னும் மாநில நெடுஞ்சாலையிடமிருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு ஒப்படைக்கப்படாமல் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட உள்ளதை காரணம் காட்டி தற்போதுள்ள சாலையை புதுப்பிக்காமல் பழுதடைந்த இடங்களில் மட்டும் நெடுஞ்சாலைத்துறையினர் அவ்வப்போது பேட்ஜ் ஒர்க் செய்து வருகின்றர். அவ்வாறு செய்யப்படும் பேட்ஜ் ஒர்க் தரமற்ற நிலையில் இருப்பதால் சாலை விபத்துகள் அதிக அளவில் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.  இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பவானி நகர கமிட்டி உறுப்பினர் சண்முகசுந்தரம் கூறியதாவது: பவானியில் இருந்து மேட்டூர் செல்லும் சாலையில் சின்னப்பள்ளம் வரை ரூ.40 கோடி செலவில் சாலை போடப்பட்டது. தரமற்ற நிலையில் போடப்பட்ட இந்த சாலை ஆங்காங்கே மேடு பள்ளங்களாக காட்சியளிக்கிறது. மேலும் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலையில் பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்டுள்ளது. இந்த பேட்ஜ் ஒர்க்கும் தரமற்ற நிலையிலேயே ய்யப்பட்டுள்ளதால், அதிக அளவில் வாகன விபத்துகள் நடந்து வருகிறது. பவானி பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.  இத்திட்டத்திற்காக நிலம் அளவீடு பணிகளோடு அப்படியே திட்டம் நின்றுவிட்டது. இது தொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இவ்வாறு சண்முகசுந்தரம் கூறினார்.

Tags : ceremony ,reunion ,road ,accident ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா