×

தென்காசி அமமுகவினர் அதிமுகவில் ஐக்கியம்

தென்காசி, பிப். 26:   தென்காசியில் அமமுக நகரச் செயலாளர் துப்பாக்கி பாண்டியன், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, புகழேந்தி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தென்காசியில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, புகழேந்தி முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் தென்காசி நகர அமமுக செயலாளரும், கூட்டுறவு விற்பனை சங்க தலைவருமான கண்ணன் என்ற துப்பாக்கி பாண்டியன், கூட்டுறவு விற்பனை சங்க துணைத்தலைவர் ராஜாமுகமது, ராமசாமி, இசக்கிமுத்து, கண்ணன், ரமேஷ், அண்ணாதுரை, கார்த்திக், முகமது அலி, ஹைதர் அலி, பலவேசம், இசக்கி, சரவணன், சங்கர், சாஸ்தா பாண்டியன், லட்சுமணன், செல்வராஜ், ராதாகிருஷ்ணன், அருணாசலம், கிருஷ்ணன், மாடசாமி, சுரேஷ்பாலகணேஷ், பாலாஜி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர்  அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

Tags : Tenkasi Introverts ,AIADMK ,
× RELATED திருச்சியில் பேராசிரியை கடத்தப்பட்ட...