முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சங்கரன்கோவிலில் அன்னதானம் அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்

சங்கரன்கோவில் பிப்.26:  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சங்கரன்கோவிலில் எம்ஜிஆர்  மன்றத்தின் சார்பில் அன்னதானம் வழங்குவதை அமைச்சர் ராஜலட்சுமி  துவக்கிவைத்தார்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது  பிறந்தநாளையொட்டி சங்கரன்கோவிலில் எம்ஜிஆர் மன்றம் சார்பில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை வகித்த அமைச்சர் ராஜலட்சுமி, சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர்  தமிழ்மகன் உசேன் ஆகியோர் அன்னதானம் வழங்குவதை துவக்கிவைத்தனர். மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும், அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளருமான தச்சை  கணேசராஜா முன்னிலை வகித்தார். காலை 11 மணி வரை மாலை 4 மணி வரை சுமார் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 இதில்  மாவட்ட பொருளாளர் சண்முகையா, நெல்லை கூட்டுறவு  பேரங்காடி துணைத்தலைவர் வேல்சாமி, ஒன்றியச் செயலாளர்கள் ரமேஷ்,  வேல்முருகன், வாசுதேவன், நகரசெயலாளர் ஆறுமுகம், மாநில பேச்சாளர் கணபதி,  கூட்டுறவு சங்க தலைவர் ராமநாதன், அரசு ஓப்பந்ததாரர் மாரியப்பன், நகர  அவைத்தலைவர் கந்தவேல், மாணவர் அணி மாவட்ட பொருளாளர் மாரியப்பன்,  நிர்வாகிகள் சங்கரசுப்பிரமணியன், நிவாஸ், தங்கம், முருகன்,  ஆப்ரேட்டர்  மணி, மணிகண்டன், முன்னாள் நிலவளவங்கி தலைவர் லட்சுமணன், கூட்டுறவு சங்க  இயக்குநர்கள் மாரிச்சாமி, சின்னராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் காளிராஜ்,  குமாரவேல், ராமதுரை, ஆனந்த், முத்துக்குட்டி, சரவணன், நாகரத்தினம்,  நிர்வாகிகள் மாரியப்பன், முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை  எம்ஜிஆர் மன்ற மாநகர் மாவட்டச் செயலாளர் கண்ணன் என்ற ராஜூ செய்திருந்தார்.

Related Stories: