×

அய்யா வைகுண்டர் அவதார நாள் நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 3ல் உள்ளூர் விடுமுறை கலெக்டர் ஷில்பா தகவல்

நெல்லை, பிப். 26: அய்யா வைகுண்டர் அவதார நாள் விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 3ல் உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவு: கன்னியாகுமரி மாவட்டம், சுவாமித் தோப்பு அய்யா வைகுண்டர் அவதார நாள் விழா மார்ச் 3ம் தேதி செவ்வாய்க் கிழமை நடக்கிறது. இதையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடந்து வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.   அன்று அரசு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளதால் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடக்கும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது. மார்ச் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எந்த மாறுதலுமின்றி நடைபெறும்.  இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 21ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு  அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Shilpa ,paddy district ,Ayya Vaikundar ,
× RELATED நெல்லை மாவட்டத்தில் 2,114 பேரை...