அம்பை, கல்லிடையில் கனிமொழி எம்.பி.க்கு திமுகவினர் வரவேற்பு

அம்பை, பிப். 26: பொட்டல்புதூரில்  நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் தலைமை யில் காரில் வந்த திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி.க்கு  கல்லிடைக்குறிச்சி, அம்பையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் முன் நகரச் செயலாளர் இசக்கிபாண்டியன் தலைமையிலும், அம்பை பூக்கடை பஜாரில் நகரச் செயலாளர்  பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர்.  இதில் வி.கே.புரம் நகரச்  செயலாளர் கணேசன் பாப்பாக்குடி ஒன்றியச் செயலாளர் மாரி வண்ணமுத்து, இலக்கிய அணி  ராமசாமி, மகளிர் அணி வசந்தா ஆரோக்யம், மேரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: