சாயர்புரத்தில் தெற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஏரல், பிப்.26: சாயர்புரத்தில் நடந்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமை மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் சாயர்புரத்தில் நடந்தது. மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் காந்த், ரெமிசன், குருபாஸ்கர், ஜோசப் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை அமைப்பாளர் ராகவன் வரவேற்றார். தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உறுப்பினர் சேர்க்கை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் திமுக பொறியாளர் அணியில் சேர்ந்தனர்.

Advertising
Advertising

இதில் மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் பிரதீப், மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணகுமார், வைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிஜி ரவி, மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை அமைப்பாளர் ராஜேஷ் ரவிசந்தர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகப்பெருமாள், இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், வர்த்தகர் அணி அமைப்பாளர் சுந்தரராஜன், சாயர்புரம் நகர செயலாளர் வரதராஜ் ஸ்டாலின், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், ரகுராமன், சுபமாரியப்பன், அனஸ், ஜோதிராஜா, முகம்மது, பழையகாயல் கூட்டுறவு சங்கம் தலைவர் ஜெயசங்கர், சாயர்புரம் நகர இளைஞரணி கண்ணன், துணை செயலாளர் கிறிஸ்டோபர், நல்லூர் பஞ்.தலைவர் பரிசமுத்து மற்றும் நாராயணன், கிருஷ்ணபெருமாள், சித்திரைவேல், கிப்ஸன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: