நாசரேத்தில் கட்டி முடித்து 6 மாதமாகியும் திறக்கப்படாத துணை வேளாண்மை விரிவாக்க மையம்

நாசரேத், பிப்.26: நாசரேத்தில் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதமாகியும் துணை வேளாண்மை விரிவாக்க மையம் திறக்கப்படாமல் உள்ளது.நாசரேத் கே.வி.கே.சாமி சிலை அருகில் மெயின் ரோட்டில் ரூ.30 லட்சம் செலவில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையம் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதமாகியும் திறக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால் இந்த மையம் காட்சியாக  பொருளாக காணப்படுகிறது.

Advertising
Advertising

 சமீபத்தில் திருச்செந்தூருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி வந்தபோது கூட இந்த மையம் திறக்கப்படாதது பொதுமக்கள், விவசாயிகளுக்கிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கட்டி முடிக்கப்பட்டு6 மாதமாகியும் திறக்கப்படாத நிலையில்உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை உடனே திறக்க வேண்டுமென அப்பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: