தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் கரும்புகையை வெளியிடும் கண்டமான வாகனங்கள் மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி

ஸ்பிநகர், பிப்.26:  சாலையில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் கரும்புகையை வெளியிட்டு செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகன போக்குவரத்து சென்று வருகிறது. இதுமட்டுமன்றி ைபக், கார், லாரி மற்றும் சரக்கு லாரி போக்குவரத்தும் அதிகளவில் நடைபெறுகிறது.இவ்வாறு செல்லும் வாகனங்கள் சுற்றுச்சூழல் பாதிக்கும் வகையில் கரும்புகையை வெளியிட்டு கொண்டு செல்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பது மட்டுமல்லாமல் சிலசமயங்களில் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கும் மூச்சு திணறால் பாதிக்கப்படும்  நிலை ஏற்படுகிறது. தினமும் கரும்புகையை சுவாசிப்பதால் நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு பின்னால் செல்லும் வாகனங்கள் பாதை தெரியாமல் தடுமாறுகின்றன. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

தற்போது விற்பனைக்கு வரும் புதிய வாகனங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பரிசோதனை செய்யப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட புகையளவு வெளிவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அதனால் பாதிப்பில்லாமல் உள்ளது. எனவே பழைய வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படாததால் கரும்புகையை வெளியிட்டபடி சாலையில் செல்கிறது.இவ்வாறு பழைய வாகனங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து சான்றிதழ் பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் புகையை வெளியிடும் வாகனங்கள் சாலையில் சென்றவண்ணம் தான் உள்ளது. ஆகையால் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் சுற்றுச்சூழல் பாதிக்கும் வகையில் கரும்புகையை வெளியிட்டு செல்லும் வாகனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: