×

விமான நிலையம் டூ மெப்ஸ் டெம்போ டிராவலர் இணைப்பு சேவை : மெட்ரோ ரயில்வே தகவல்

சென்னை: மெட்ரோ ரயிலை பயன் படுத்துவோரின் வசதிக்காக விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் முதல் மெப்ஸ் வரை கூடுதலாக டெம்போ டிராவலர் இணைப்பு சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகள் வசதிக்காக பல போக்குவரத்து இணைப்பு சேவைகளான ஷேர் ஆட்டோ, ஷேர் டாக்சி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சிறிய பேருந்து சேவை, மெட்ரோ சீருந்து இணைப்பு சேவை, இ-பைக் மற்றும் மிதிவண்டி ஆகியவற்றை வழங்கி வருகிறது.

தற்போது, கூடுதலாக விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் முதல் மெப்ஸ் வரை குளிர்சாதன வசதியுடன் கூடிய டெம்போ டிராவலர் இணைப்பு சேவை 20 கட்டணத்தில் நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இச்சேவை 30 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஏற்கனவே விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் முதல் பம்மல் வரை சென்றுவர 5 சீருந்து இணைப்பு சேவை மற்றும் 1 குளிர்சாதன வசதியுடன் கூடிய டெம்போ டிராவலர் இணைப்பு சேவைகளையும், விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் முதல் மெப்ஸ் வரை சென்றுவர 4 மெட்ரோ சீருந்து இணைப்பு சேவைகளையும் வழங்கி வருகிறது. இதனுடன் கூடுதலாக, விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் முதல் மெப்ஸ் வரை சென்றுவர 1 குளிர்சாதன வசதியுடன் கூடிய டெம்போ டிராவலர் இணைப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Airport Two ,Meps ,
× RELATED இமாச்சலப்பிரதேசம்: 15 பாஜக...