×

டெங்குவுக்கு முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் ரத்த தட்டணுக்களை அழித்து உயிரிழப்பை ஏற்படுத்தும் கலெக்டர் தகவல்

பெரம்பலூர், பிப்.26: பெரம்பலூரில் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காய்ச்சல் நோய்த்தடுப்பு மருந்தான நிலவேம்பு குடிநீர் சூரணத்தை கலெக்டர் சாந்தா நேற்று வழங்கினார். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காய்ச்சல் நோய்த் தடுப்பு மருந்தான நிலவேம்பு குடி நீர்சூரணம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (25ம்தேதி) பெர ம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை வகித்து நிலவே ம்புக் குடிநீர் சூரணம் வழங் கும் பணிகளைத் தொடங் கி வைத்துப் பேசியதாவது : டெங்குக் காய்ச்சல் மனிதர்களை ஏடிஸ் வகையின் கொசுக்கள் கடிப்பதால் மனிதர்களுக்கு பரவுகிறது. இவ்வகை கொசுக்கள் நல்ல நீரில் வசிப்பவை. இவை பகலில் மட்டுமே மனிதர்களைக் கடிக்கும் தன்மையுடையது. இந்நோயினால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கு அதிக காய்ச்சல், அசதி, தலைவலி, உடம்பு வலி, கண்ணின் பின்புறம் வலி, கண்சிவந்துபோகுதல், தோலில் நிறமாற்றம், திட்டுக்க ள், கடுமையான தசைவலி மற்றும் மூட்டுவலி உள்ளிட் ட அறிகுறிகள் காணப்படும்.

எனவே பொதுமக்கள் அ னைவரும் இதுபோன்ற அறிகுறிகள் காணப்படும் போது முழு ரத்தப் பரிசோதனை (முக்கியமாக ரத்ததட்டுக்களின் எண்ணி க்கை) உள்ளிட்ட பரிசோத னைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்குக் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிகிச்சை மேற்கொள்ளபடவில்லையெனில் ரத்த தட்டணுக்களை அழித்து அதன் மூலம் ரத்தக்கசிவை உண்டாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும். மேலும் வாந்தி, வயிற்றில் நீர் சேர்தல் மற்றும் வயிற் றுவலி, நுரையீரலில் நீர் சேர்தல், மூச்சுத்தினறல் உள் ளிட்டப் பாதிப்பை ஏற்படுத் தும். எனவே பொதுமக்கள் அனைவரும் டெங்கு காய்ச்சல் பரவுவதிலிருந்து தடுக் கும் வகையில் வீட்டைச்சுற்றி சுற்றுப்புறங்களை தூய்மையாகப் பேணிகாக்க வேண்டும்.
மேலும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியைத் தடுக்கும் வகையில் தண்ணீரை மூடி வைக்கவும், தேவையற்ற பொருட்களில் நீர் தேங்குவ தைத் தவிர்க்கவும் வேண் டும். தமிழக அரசு டெங்கு காய்ச்சல், சிக்கன் குன்யா மற்றம் வைரஸ் காய்ச்சலா ல் பாதிக்கப்படும் பொதும க்களை பாதுகாக்கும்வகையில் சித்த மருத்துவத் து றையின் மூலம் நிலவேம்பு கசாயம் இலவசமாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிள் வழங்கப்படுகிறது. இந்தக் கசாயத்தில் நிலவேம்பு, விளாமிச் சம்வேர், வெட்டிவேர், சுக்கு, மிளகு, சந்தனம், கோரைக் கிழங்கு, பேய்ப்புடல், பற்ப டாகம் உள்ளிட்ட மூலபொருட்கள் கலந்துள்ளன.

இம்மருந்துகள் காய்ச்சலை கட்டுப்படுத்தி உடலில் போதுமான அளவு நீர்ச்சத்தை தக்கவைத்து, காய்ச்சலுடன் கூடிய வலி மற்றும் வீக்கத்தை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டி கிருமிகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றி உடல் மற்றும் மனநிலையை சிறப்பாக வைத்துக்கொள்ள உதவுகி ன்றன. எனவே இம்மருந்து களை அரசுஅலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெற் றுக்கொண்டு கசாயம் பரு கி டெங்கு உள்ளிட்ட காய்ச் சலிலிருந்துதங்களை பாது காத்துக்கொள்ள வேண் டும் எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தெய்வநாயகி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், பெரம்பலூர் அரசு மருத்துவமனை சித்தமருத்துவ அலுவலர் விஜயன், சித்த மருத்துவ அலுவலர் குண சேகரன் உள்ளிட்டப்பலரும் கலந்து கொண்டனர்.

Tags : death ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...