×

ஸ்டாலின் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட்டம் தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக கூட்டத்தில் தீர்மானம்

தா.பழூர், பிப். 26: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடுவது என தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெயராமன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாநில சட்ட திட்ட குழு உறுப்பினர் சந்திரசேகர், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஒன்றிய பொறுப்பாளர் க.சொ.க. கண்ணன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ராமதுரை, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சங்கர், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கண்ணதாசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக், மாவட்ட துணை அமைப்பாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் நாகராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் காந்தி , மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜான், தொழிலாளர் முன்னேற்ற சங்க துணைத்தலைவர் சம்பந்தம், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் காவேரி, குணசேகரன், சேகர் மற்றும் ஊராட்சி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக தா.பழூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் தோறும் கழக கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது. கழகத்தின் 15வது அமைப்பு தேர்தலை முன்னிட்டு தா.பழூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஊர் வாரியாக கிளைகள் அமைத்து சுமுகமாக தேர்தலை நடத்துவது.

சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த வேளாண் மண்டலத்தில் அரியலூர் மாவட்டம் இடம்பெறவில்லை. குறிப்பாக தா.பழூர் மற்றும் திருமானூர் ஒன்றியங்கள் தி.மு.க ஆட்சியில் டெல்டா பகுதியாக அறிவிக்கப்பட்டு, பல்வேறு சலுகைகள் பெற்றுவரும் நிலையில், தமிழக அரசு புறக்கணிப்பு செய்துள்ளதை வன்மையாக கண்டித்து, உடனடியாக அரியலூர் மாவட்டத்தை வேளாண் மண்டல பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகை குமரன் நன்றி கூறினார்.

Tags : Stalin ,birthday ,youth rebellion ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு!