×

அரியலூர் மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு ஊக்கப்பரிசு

அரியலூர்,பிப்.26: அரியலூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசுகளை கலெக்டர் ரத்னா வழங்கினார்.நிகழ்ச்சியில், அரியலூர் மாவட்டத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறந்த மூன்று பட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ரொக்கப்பரிசு வழங்கி வருகிறது. அதனடிப்படையில், கலியமூர்த்தி என்பவர் 1.5 ஏக்கரில் 575 முட்டைக்கூடுகள் வைத்து, 398 கிலோ பட்டுப்புழுக்கள் வளர்த்து, 1 லட்சத்து 44 ஆயிரத்து 632 லாபம் பெற்றதற்கு முதல் பரிசாக 25 ஆயிரத்திற்கான காசோலையினையும், நம்மகுணம் கிராமத்தைச் சேர்ந்த செல்லபாண்டியன் என்பவர் 3.5 ஏக்கரில் 675 முட்டைக்கூடுகள் வைத்து, 372 கிலோ பட்டுப்புழுக்கள் வளர்த்து, 1 இலட்சத்து 22 ஆயிரத்து 681 இலாபம் பெற்றதற்கு இரண்டாம் பரிசாக 20 ஆயிரத்திற்கான காசோலையினையும், கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் 4 ஏக்கரில் 525 முட்டைக்கூடுகள் வைத்து, 324 கிலோ பட்டுப்புழுக்கள் வளர்த்து, 1 இலட்சத்து 13 ஆயிரத்து 567 இலாபம் பெற்றதற்கு முதல் பரிசாக 15 ஆயிரத்திற்கான காசோலையினையும் வழங்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டது. இதுபோன்று நமது மாவட்டத்திலுள்ள பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் அதிக அளவில் பட்டுப்புழுக்களை வளர்த்து மாநில அளவில் பரிசுகளை பெற வேண்டும் தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில், உதவி ஆய்வாளர் மணிகண்டன், இளநிலை ஆய்வாளர் ஜோதி மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags : silkworm breeders ,Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...