×

ஆபத்தான பயணம் மச்சுவாடி- மருத்துவக்கல்லூரி வரை மின்விளக்கு வசதி வேண்டும்

புதுக்கோட்டை, பிப்.26: புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்எல்ஏ பெரியண்ணன் அரசு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை ஒன்றியம், மற்றும் கறம்பக்குடி ஒன்றியம், உள்ளடங்கிய கிராமங்களில் குடிநீர், சாலை வசதிகளையும் அமைத்து கொடுக்க வேண்டும் . புதுக்கோட்டை நகர் முழுவதும் குடிநீர், சாலை, மற்றும் பாதாள சாக்கடை முழுமை அடையாததையும் உடன் நடிவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசால் மனித வள மேம்பாட்டு துறையின் மூலம் அனுமதி வழங்கப்பட்ட கேந்திர வித்யாலயா பள்ளியை புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மருத்துவமனையின் காலியாக உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதியில் நடத்தவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

மச்சுவாடியில் இருந்து மருத்துவ கல்லூரி செல்லும் சாலையில் மின் விளக்கு அமைக்கவும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனு வழங்கப்பட்டது. உடன் நகர கழக செயலாளர் நைனாமுகமது, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் மணிமொழி மனோகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags : Dangerous Trip ,Machuadi - Medical College ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா