×

திமுக உறுப்பினர்கள் கூட்டம்

பாபநாசம், பிப். 26: பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் ஒன்றிய திமுக சார்பில் உறுப்பினர் கூட்டம் நடந்தது. பாபநாசம் ஒன்றிய அவைத்தலைவர் யூசுப் அலி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் அய்யாராசு, மாவட்ட பொருளாளர் ஷேக்தாவூது முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் பேசினார். கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் கழக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பாபநாசம் ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன், ஒன்றிய துணை செயலாளர் கருணாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : DMK ,meeting ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி