×

சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பாபநாசத்தில் 6வது நாளாக இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம்

பாபநாசம், பிப். 26: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி தர்வேஸ் தைக்கால் மில்லத் நகரில் நேற்று 6வது நாளாக இஸ்லாமியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதில் சக்கராப்பள்ளி, அய்யம்பேட்டை, வழுத்தூர், பண்டாரவாடை, ராஜகிரி, வடக்குமாங்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே இஸ்லாமியர்கள் 5வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மாநாடு: பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் விமன் இந்தியா மூவ் மெண்ட் அமைப்பு சார்பில் மாநாடு நடந்தது. தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஆமீனா பீவி தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் நஸ்ரத்பேகம் வரவேற்றார். எஸ்டிபிஐ கட்சி மாநில பொது செயலாளர் உமர்பாரூக், விமன் இந்தியா மூவ்மெண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் ஷாகிரா பானு, ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் சையது முஹம்மது உஸ்மானி ஆகியோர் பேசினர். மாவட்ட செயலாளர் ஆசியாபேகம் நன்றி கூறினார்.

கண்டன பொதுக்கூட்டம்: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பாபநாசம் அருகே வழுத்தூரில் சமுதாய நல்லிணக்க பேரவை சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. பேரவை தலைவர் அப்துல் ஜமீல் தலைமை வகித்தார். செயலாளர் கமாலுதீன் பைஜி வரவேற்றார். மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது------- ம௹ப் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கலீலுர் ரஹ்மான் துவக்கவுரையாற்றினார். தமுமுக மாநில துணைத்தலைவர் கோவை சையது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில அமைப்பு செயலாளர் அப்துல் மஜீத் கண்டன உரையாற்றினர். நாஞ்சில் சம்பத் சிறப்புரையாற்றினார். சேக் தாவூத் நன்றி கூறினார். பட்டுக்கோட்டை: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பட்டுக்கோட்டை வடசேரிரோடு பெரிய பள்ளிவாசல் அருகில் இஸ்லாமியர்கள் நேற்று காலை முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர். போராட்டத்தில் இஸ்லாமியர்கள் தேசிய கொடிகளை கைகளில் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

Tags : activists ,Islamists ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...