×

தமிழ் பெயருள்ள மாணவர்களுக்கு அரசின் கல்வி ஊக்கத்தொகை உலக தாய்மொழி தின விழாவில் வலியுறுத்தல்

மன்னார்குடி, பிப். 26: நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள், நான் ஒரு தமிழன் என்று அடையாளம் காட்டுங்கள் என பிள்ளைகளுக்கு அழகிய தமிழில் பெயர்களை சுட்ட வலியுறுத்தினார். தமிழ் கவிஞர் ந. மா முத்துகூத்தன். பெயரில் என்ன இருக்கிறது என்பார்கள். பெயரில் தான் எல்லாமும் இருக்கிறது. ஒரு பெயரைக் கொண்டே ஒருவரின் இனம், மொழி மற்றும் அவர்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவை அடையாளம் கண்டறியப்படுகின்றன.
இன்றைய நவீனம் எனும் மாயையில் அர்த்தம் பொதிந்த நம்முடைய அழகி யல் மற்றும் காரணகாரியம் மிக்க தமிழ்ப் பெயர்கள் வருங்காலச் சூழலில் காணாமற் போய்விடுமோ எனும் பெருங்கவலையையும், அச்சத்தையும் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

இந்நிலையில் உலக தாய் மொழி தினத்தையொட்டி தமிழ்நாடு கலை இலக் கியப் பெருமன்றம் சார்பில் அரசு பள்ளிகளில் கல்விபயிலும் மாணவர்களை நேரில் சந்தித்து தமிழ் மொழியின் தொன்மை மற்றும் வரலாறு குறித்தும், தமிழ் மொழியில் பெயர்களை சுட்டுவதன் அவசியம் குறித்தும், அப்படி அழகிய தமிழில் பெயரை வைத்துள்ள மாணவர்களை வாழ்த்தியும் அவர்களின் பெற்றோர்களை பாராட்டியும் பரிசுகள் வழங்கிய நிகழ்வு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களிடம் மகிழ்ச்சியையும், தன்னம்பிக் கையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மன்னை கிளை செயலாளர் ஆசிரியர் தங்கபாபு கூறுகையில், உலக தாய் மொழி தினத்தை யொட்டி அரசுப் பள்ளிகளுக்கு சென்று, அங்கு பயிலும் மாணவ, மாணவிகளில் தூய தமிழ்ப் பெயர் கொண்ட மாணவ மாணவிகளையும், தூய தமிழ்ப் பெயரைச் சூட்டிய அவர்களின் பெற்றோர்களையும் சந்தித்து, வாழ்த்தி, பாராட்டுச் சான்றும் தமிழ் நூலும் பரிசளித்து வந்தோம். அப்படி முதற் கட்ட தேர்வுக்கு மன்னார்குடி ஒன்றியத்தில் உள்ள கோபால சமுத்திரம் மற்றும் வடகோவனூர் அரசு நடுநிலைப் பள்ளிகளைத் தேர்ந்தெடு த்தோம். இரு பள்ளிகளிலும் சுமார் 300 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இதில் 30க்கும் குறைவான பெயர்கள் மட்டுமே தூய தமிழ்ப் பெயர்கள் கொண்டவையாக இருந்தது. 300 பெயர்களில் தமிழ்ப் பெயர்கள் 10 விழுக்காடு கூட தாண்டாதது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் சில மாணவர்களின் தமிழ் முதல்வி, இனியாள், இமையாள், அதியன், மகிழினி, கவிபாரதி, கவிக்குயிலி போன்ற அழகிய தமிழ்ப் பெயர்கள் கேட்பதற்கே ஆனந்தமாக இருந்தது. குழந்தை பிறந்ததும் பெற்றோர்கள் எப்படியாவது குழந்தை பிறந்த நட்சத்திரத்தின் படியும், நியூமராலஜி படியும் யாரும் தேர்ந்தெடுத்து சூட்டியிராத புதுமைப் பெயர்களை தேர்வு செய்வதில் கவனம் கொள்கிறார்களே தவிர, தமிழ்ப் பெயர்களை பிள்ளைகளுக்குச் சூட்டுவதில் அக்கரை இல்லை. எனவே தமிழ்ப் பெயர்கள் கொண்ட மாணவ, மாணவிகளையும் சாதி, மதங்கள் கடந்து அவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட சில சிறப்பு சலுகைகளை வழங்க அரசு முன்வர வேண்டும்” என்றார்.

Tags : Government ,World Mother's Day ,
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்