மேலும் ஒரு கொலையிலும் தொடர்பு அம்பலம் விவசாயிகள் விவசாய கடன் அட்டை வாங்க ஊராட்சி அலுவலகங்களில் 29ம் தேதி சிறப்பு முகாம்

திருச்சி, பிப்.26: விவசாயிகள் விவசாய கடன் அட்டை வாங்க பஞ்சாயத்து அலுவலகங்களில் வரும் 29ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் விவசாய கடன் அட்டை வழங்க வரும் கடந்த 14ம் தேதி முதல் தொடர்ந்து கிராமந்தோறும் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் மூலம் முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதில் வரும் 29ம் தேதி உழவர் கடன் அட்டை வழங்கிட தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொள்ளும் சிறப்பு முகாம் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

Advertising
Advertising

இதனால் உழவர் அட்டை வாங்கி பயன்பெற விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் விவசாய கடன் அட்டை திட்டம் 1998 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாய கடன் அட்டை வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் நிலவுடமை அடிப்படையில் பிணை இல்லா கடனாக ரூ.1.60 லட்சம் வரையில் பெறலாம் அசல் வட்டியை குறித்த காலத்திற்குள் சரியாக செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டி தொகை ஊக்கத்தொகையாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். கடன் அட்டையை 5 வருடம் வரை பயன்படுத்தலாம். விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் வாங்க நிதியுதவி பெறலாம். கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பிற்கு கடன் பெறலாம். இதனால் 29ம் தேதி வரை பிரதம மந்திரியின் விவசாய ஊக்கத் தொகை பெறும் விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்கும் பொருட்டு இந்த சிறப்பு முகாம் நடக்கிறது.

மேலும், வரும் 29ம் தேதி அந்தந்த பகுதி பஞ்சாயத்து அலுவலகம் அலுவலகங்களில் வேளாண் துறை தோட்டக்கலை துறை, ஊரக வளர்ச்சித் துறை வருவாய்த்துறை தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தகுதி உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர உரிய விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை கணினி சிட்டா வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை அந்தந்த கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் வழங்கி இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம் என கலெக்டர் சிவராசு கூறியிருக்கிறார்.

Related Stories: