இன்ஜி. மாணவர் கொலை வழக்கில் கைதானவர் திருச்சி கோர்ட்டில் ஆஜர்

திருச்சி, பிப்.26: திருச்சி மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 1,500க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த மாதம் 17ம் தேதி மாலை சிறை ஜெயிலர் சதீஷ்குமார் திடீரென அதிரடி சோதனை நடத்தினார். அப்போது செல்லில் சேலம் மாவட்டம் ஒமலூர் இன்ஜினியரிங் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள யுவராஜ் என்பவரிடம் இருந்து 2 செல்போன், 1 சிம்கார்டு, 2 பேட்டரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து ஜெயிலர் சதீஷ்குமார், கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த வழக்கில் யுவராஜை கைது செய்த கே.கே.நகர் போலீசார் நேற்று ஜேஎம் 2 நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பின் மீண்டும் சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: