இலவச மருத்துவ முகாம் நல்லாண்டவர் கோயிலில் பக்தர்கள் ரூ.9 லட்சம் காணிக்கை

மணப்பாறை, பிப்.26: மணப்பாறை மாமுண்டி ஆற்றங்கரை ஓரத்தில் பிரசித்து பெற்ற மான்பூண்டி நல்லாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் உண்டியல் எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, ஜமீன்தார் முதுவீரலெக்கய நாயக்கர் மற்றும் செயல் அலுவலர் கண்ணன் முன்னிலையில் நடந்தது. கடந்த 5 மாதத்திற்கு பிறகு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணியில் முனியப்பன் கோயில் செயல் அலுவலர் ஜீவானந்த், ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் சில்லரை நாணயங்கள் உட்பட ரூ.9 லட்சத்து 20 ஆயிரத்து 213 காணிக்கை வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் இத்தொகை வங்கியில் செலுத்தப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: