திருமணமான 14ம் நாளில் புதுப்பெண் மாயம்

திருச்சி, பிப். 26:  கரூர் மாவட்டம் குளித்தலை நடுத்தெருவை சேர்ந்தவர் கனகராஜ்(29), கூலித்தொழிலாளி. இவரது மனைவி லதா(23). இவர்களுக்கு திருமணமாகி 14 நாட்களாகிறது. இந்நிலையில் லதா கடந்த 23ம் தேதி தோழி ஒருவர் திருச்சிக்கு வருவதாகவும், அவரை அழைத்து வர வேண்டும் எனக்கூறி கணவருடன் திருச்சி சத்திரம் பஸ்நிலையத்துக்கு வந்தார். அங்கு ஜெராக்ஸ் கடைக்கு சென்றுவிட்டு வருவதாகவும், பேக்கரி அருகே கணவரை நிற்க வைத்து சிறிது நேரம் காத்திருக்கும்படி கூறிவிட்டு சென்ற லதா நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து லதாவின் தந்தை சுப்ரமணி அளித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து லதாவை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

இது குறித்து கனகராஜ் விசாரணையின்போது போலீசாரிடம் கூறியது: திருமணமாகி 14 நாட்கள் தான் ஆகிறது. இதுவரை என்னை அவள் தொடவிடவில்லை. நாளடைவில் சரியாகி விடும் என கருதினேன். இந்த நிலையில் அவள் மாயமாகி விட்டாள் என்றார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். லதாவுக்கு விருப்பமில்லாமல் இந்த திருமணம் நடத்தப்பட்டதா, லதா வேறு யாரையும் காதலித்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: