சட்டமன்ற குழு வருகை ரத்து

திருச்சி, பிப்.26: திருச்சி மாவட்டத்திற்கு தமிழக சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு (2018-2020 வரை) பிப்.27 நாளை வருகை தருவதாக இருந்தது, நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன் தலைமையில் பிப்.27 (நாளை) 18 எம்எல்ஏக்கள் திருச்சிக்கு வருகை தருவதாக இருந்தது. நிர்வாகக் காரணங்களால் அன்றைய தினம் வருகை புரியவில்லை என்றும், தமிழக சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு வருகை தரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: