×

தேசிய குடியுரிமை சட்டம் குறித்து ஜெனீவாவில் பேசும் வழக்கறிஞர்

ராஜபாளையம், பிப். 26:ராஜபாளையம் அருகே தர்மாபுரத்தில் ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில், இலவச ஆம்புலன்ஸ் மற்றும் ரத்ததான கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த நற்பணி மன்றத்தின் ஆலோசனை கூட்டம், தலைவர் ராமராஜ் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் முரளி முன்னிலை வகித்தார். ஐக்கிய நாடுகள் சபை சார்பில், சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவாவில் பிப்.,24 முதல் மார்ச் 20ம் தேதி வரை நடைபெற உள்ள மனித உரிமை ஆணைய கூட்டத்தில், நற்பணி மன்றத்தின் செயலாளரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான ராம்குமார் ராஜா கலந்து கொள்ள உள்ளார்.

இவர் தேசிய குடியுரிமை சட்டம், ராஜபாளையம் அருகே உள்ள மொட்டை மலை அகதிகள் முகாமின் மேம்பாடு மற்றும் இலங்கை அகதிகள் குடியுரிமை சட்டங்கள் குறித்த, பொது மக்களின் எதிர்பார்ப்பு குறித்து வலியுறுத்தி பேச உள்ளார்.
இவருக்கு ஆலோசனை கூட்டத்தில் பாராட்டி தீர்மானம் இயற்றப்பட்டது. இக் கூட்டத்தில் மன்ற பொருளாளர் வெங்கடேசன், உறுப்பினர்கள் ராம்சிங், முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Advocate ,Geneva ,
× RELATED இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கிய...