×

போடி பகுதியில் மொச்சை அறுவடை தீவிரம்

போடி, பிப். 26: போடியைச் சுற்றியுள்ள சில்லமரத்துப்பட்டி, சிலமலை, சூலப்புரம், மணியம்பட்டி, ராசிங்கபுரம், திம்மநாயக்கன்பட்டி, பொட்டிப்புரம், நாகலாபுரம், பெருமாள் கவுண்டன்பட்டி, காமராஜபுரம், விசுவாசபுரம் ஆகிய பகுதிகளில் மானாவாரி நிலங்களில், மழையை நம்பி குறுகிய கால பயிரான மொச்சையை கடந்த 4 மாதத்திற்கு முன் பயிரிட்டனர். இதற்காக நிலத்தை உழுது, விதைகளை பாவி, களை பறித்து, உரம் தெளித்து அறுவடை வரை ஏக்கருக்கு 20 ஆயிரத்துக்கு மேல் விவசாயிகள் செலவு செய்துள்ளனர்.  இவ்வாறு பயிரிடப்பட்ட மொச்சை வளர்ந்து அறுவடைக்கு தற்போது தயாராகி உள்ளது. செடிகளில் இருந்து மொச்சை நெத்துகளை பறிக்கும் விவசாயிகள், உலர்களங்களில் காயவைத்து, அடித்து நெத்திலிருந்து மொச்சை பயறுகளை பிரித்தெடுக்கும் பணியில் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு பிரித்தெடுக்கும் மொச்சைப் பயறுகளை வியாபாரிகள் நேரடி கொள்முதல் செய்து, தேனி மற்றும் மதுரை சந்தைக்கு அனுப்பி வருகின்றனர்.

Tags : Bodi ,area ,
× RELATED காட்டுமாடு முட்டி விவசாயி படுகாயம்