×

நேரம் காட்டியாக விளங்கிய சங்கு சத்தம் மீண்டும் கேட்குமா?

காளையார்கோவில், பிப்.26: காளையார்கோவில் சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு நேரம் காட்டியாக விளங்கிய சங்கு சத்தம் பல ஆண்டுகளாக செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. சங்கு சத்தம் மீண்டும் புத்துயிர் பெறுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.காளையார்கோவில் ஊராட்சியில் பல ஆண்டுகளுக்கு முன் சுமார் 30 அடி உயரத்தில் டவருடன் கூடிய சங்கு அமைக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரங்களுக்கு மட்டும் இதில் இருந்து சங்கு சத்தம் வெளியேறும். இந்த ஒலி காளையார்கோவில் மற்றும் சுற்றியுள்ள கிராமமக்களுக்கு 10 கிலோ மீட்டர் சுற்றளவில் கேட்கும். இதன் அடிப்படையில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நேரத்தை கணக்கிட்டு வந்தனர்.பல ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து வந்த சங்கு தற்போது சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் முடங்கி கிடக்கின்றது. இதனால் நேரத்தை கணக்கிட முடியாமல் தொழிலாளர்கள், விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மீண்டும் டவரை சீரமைத்து சங்கு ஒலி கேட்பதற்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்