×

திருவரங்கம் பள்ளி செல்லும் சாலை சீரமைப்பு

கமுதி, பிப். 26: திருவரங்கம் திருஇருதய மேல்நிலைப் பள்ளி செல்லும் சாலை தினகரன் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டு வருகிறது. முதுகுளத்தூர் அருகே, திருவரங்கம் திரு இருதய மேல்நிலைப் பள்ளி மற்றும் தேவாலயம் செல்லும் சாலை நீண்ட நாட்களாக சேதமடைந்து காணப்பட்டது. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் தேவாலயத்திற்கு செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.இந்நிலையில் கடந்த 15ம் தேதி தினகரன் நாளிதழில் இது பற்றி செய்தி வெளிவந்தது. இந்த செய்தி எதிரொலியின் காரணமாக சாலை சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள், நிர்வாகத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை