×

தொண்டியில் காத்திருப்பு போராட்டம்

தொண்டி, பிப். 26:குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் தொண்டியில் இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் புதிய சட்டமான குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட அனைத்து கருப்பு சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி நேற்று முதல் தொண்டி பாவோடி மைதானத்தில் இஸ்லாமியர்கள் காத்திருப்பு போராட்டத்தை துவ்ஙகினர். பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மத்திய, மாநில அரசை கண்டித்தும் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது. தேசிய தவ்கித் கூட்டமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை