மீனாட்சி கோயில் உண்டியல் எண்ணிக்கை

மதுரை, பிப்.26: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் மீனாட்சி கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல்கள் திறப்பு நடந்தது. கூடலழகர் கோயில் உதவி ஆணையர் ராமசாமி, கோயிலின் தக்கார் பிரதிநிதி, கண்காணிப்பாளர்கள், கோயில் அலுவலர்கள், பணியாளர்கள், மதுரை தெற்கு மற்றும் வடக்கு ஆய்வர்கள், பக்தர் பேரவையினர், எஸ்பிஐ. வங்கியின் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சுமார் 289 பேர் உண்டியல்கள் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், முக்தீஸ்வரர் கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், திருவாதவூர் திருமறைநாதர் சுவாமி கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அப்போது ரூ.96 லட்சத்து 96 ஆயிரத்தது 601 மற்றும் பலமாற்று பொன் இனங்கள் 830 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 877 கிராம், அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர்,மலேசியா, இலங்கை போன்ற அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 589 எண்ணிக்கையும் வரப்பெற்றது.

Related Stories: