×

பழநி அருகே குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம்

பழநி, பிப். 26: பழநி அருகே கீரனூரில் குழந்தைத் திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.பழநி அருகே கீரனூர், தொப்பம்பட்டி அரசு பள்ளிகளில் குழந்தை திருமண தடுப்பு மற்றும் விடலைப்பருவ கர்ப்பத்தால் பாதிப்பு உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. சப்கலெக்டர் உமா தலைமை வகித்தார். கல்வித்துறை, சுகாதாரத்துறை, குழந்தை பாதுகாப்புத்துறை, சமூகநலத்துறை அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான அரசு சட்டங்கள், தண்டனைகள், விடலைப்பருவங்களில் கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Child Marriage Prevention Awareness Camp ,Palani ,
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது