உள்ளாட்சித்தேர்தல் வார்டு மறுவரையறை கருத்துக்கேட்பு கூட்டம் திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு

விழுப்புரம், பிப். 26: விழுப்புரத்தில் நடந்த உள்ளாட்சித்தேர்தல் வார்டு மறுவரையறை கருத்துக்கேட்பு கூட்டத்தில் இருந்து திமுக, இ.கம்யூ., பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.கூட்டம்தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது. 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வார்டுகளை மறுவரையறை செய்து 4 மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தமிழ்நாடு மாநில உள்ளாட்சி அமைப்பு வார்டு மறுவரையறை ஆணையக உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி வார்டு எல்லைகளை மறுவரையறை செய்தல் தொடர்பான வரைவு பட்டியலை ஆட்சியர் அண்ணாதுரை கடந்த 18ம் தேதி வெளியிட்டார். இதுதொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்ற கருத்துகேட்புக்கூட்டம்  விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

ஆட்சியர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஊரகவளர்ச்சி முகமைதிட்ட இயக்குநர் மகேந்திரன் வரைவு அறிக்கை குறித்து பேசினார். திமுக எம்எல்ஏக்கள் பொன்முடி, மாசிலாமணி, இந்திய கம்யூனிஸ்ட் சரவணன், காங்கிரஸ் கட்சி ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிக்குட்பட்ட 126 வார்டுகளையும், 2 நகராட்சிக்குட்பட்ட 75 வார்டுகளையும், 688 கிராம ஊராட்சிக்குட்பட்ட 5088 சிற்றூராட்சி வார்டுகளையும், 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 293 ஒன்றிய வார்டுகளையும், 28 மாவட்ட ஊராட்சி வார்டுகளையும் உள்ளடக்கிய ஊரக வார்டுகள் குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பான ஆவணங்கள் ஏதும் வழங்கவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சரவணன் கேள்வி எழுப்பினார். எந்தவித ஆவணங்களும் இல்லாமல் நாங்கள் எப்படி கருத்து தெரிவிக்க முடியும், சம்பிரதாயத்திற்கு கூட்டம் நடத்தப்படுகிறது என்றார்.இதனைத்தொடர்ந்து பொன்முடி எம்எல்ஏ பேசுகையில், ஏற்கனவே மாவட்ட ஊராட்சி எல்லைகள் மாற்றியமைப்பு கருத்து கேட்புக்கூட்டத்தை நடத்தினீர்கள். இதில் பல கோரிக்கைகளை முன்வைத்தும் ஒரு கோரிக்கைகளைக்கூட நிறைவேற்றவில்லை. குறிப்பாக, திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொடியனூர், குன்னத்தூர், வீரணாம்பட்டு கிராமங்களை திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தோடு இணைக்க வேண்டும் என்று கோரிக்கை

Related Stories: