அனுமதியின்றி போராட்டம் நடத்திய 70 பேர் மீது வழக்கு

விழுப்புரம், பிப். 26: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும்  இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுபோன்று நேற்று மாலை 6 மணியளவில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் நகர செயலாளர் அக்பர் தலைமையில் போராட்டம் நடத்தினர். ஆனால் இப்போராட்டத்துக்கு போலீசார் அனுமதியளிக்கப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசார், அவர்களிடம் இப்போராட்டத்துக்கு அனுமதியளிக்கப்படாத நிலையில் எப்படி போராட்டம் நடத்தலாம் எனக் கூறி இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த 40 ஆண்கள், 30 பெண்கள் உள்பட 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: