விவசாய கடன் அட்டை சிறப்பு முகாம்

திருக்கோவிலூர், பிப். 26: திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேட்டையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாய கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் ராஜா முன்னிலை வகித்தார். உதவி அலுவலர் மகாதேவன் வரவேற்றார். விவசாய கடன் அட்டை வழங்கும் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.1.60 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் வேளாண் இடுபொருட்கள், உரம், பூச்சி கொல்லி மருந்துகள் வாங்கவும் மற்றும் உற்பத்திக்கு தேவையான நிதி உதவி பெறவும் முடியும்.

மேலும் இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வேளாண் சார்ந்த மற்றும் சாராத தொழில்களுக்கு முதலீடு செய்ய கடன் பெறலாம் என்று விவசாயிகளுக்கு வேளாண் இணை இயக்குனர் தெரிவித்தார். வேளாண் அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். முகாமில் உதவி வேளாண்மை அலுவலர்கள் மைக்கேல், ஜெயபிரகாஷ், ஜெயபிரதா, செந்தில், ஞானவேல், அட்மா திட்ட பணியாளர்கள் சாட்டர்ஜி, மணிவேல், ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: