×

கேவிகே பண்ணையில் கிராமப்புறத்தை சேர்ந்த இளைஞர், இளம்பெண்களுக்கு விவசாய சுயதொழில் பயிற்சி

புதுச்சேரி, பிப். 26: புதுச்சேரி குருமாம்பட்டு பெருந்தலைவர் காம
ராசர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி குருமாம்பட்டு பெருந்தலைவர் காமராசர் வேளாண் அறிவியல் நிலையத்தில் புதுவை பகுதியை சேர்ந்த விவசாயம் சார்ந்த சுயதொழில் ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் மண்புழு உரம் தயாரித்தல், நீரியல் முறையில் தீவனப்புல் வளர்ப்பு, காளான் வளர்ப்பு (சிப்பிக் காளான் மற்றும் பால் காளான்) என்ற திறன் வளர்க்கும் தலைப்புகளிலான பயிற்சிகள், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதியுதவியுடன் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை விவசாயத்தில் ஈர்த்து தக்க வைக்கும் ஆர்யா என்ற திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

விவசாயத்தில் இளைஞர்கள், இளம்பெண்களை ஈர்க்கும் விதமாகவும் மற்றும் உணவு பாதுகாப்பிற்கு வழிவகுக்கவும், சிறு விவசாய நிலங்களாக மாறிவருவதை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. மேலும், இத்திட்டத்தில் பயிற்சி பெறும் கிராம இளைஞர்கள் மற்றும் கிராம இளம்பெண்கள் தங்கள் பகுதியில் நிறுவனங்களை தொடங்கி, மற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து அவர்களை விவசாயத்தில் ஈர்த்து தக்க வைக்க வேண்டும் என்பதே ஆகும்.
ஆதலால், இந்த நோக்கத்திற்கு உட்பட்டு ஆர்வமுள்ள 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட 200 இளைஞர்கள், இளம்பெண்களை தேர்வு செய்து, தொழில்நுட்ப வல்லுநர்களால் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இதன் தொடக்கமாக, மண்புழு உரம் தயாரித்தல், நீரியல் முறையில் தீவனப்புல் வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்புக்கு 25 பேர் வீதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தகுதி அடிப்படையில், முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் புதுவை பகுதியை சேர்ந்தவர்கள் வல்லுநர்களுடன் தொடர்பு கொண்டு வரும் மார்ச் 5ம் ேததிக்குள் அலுவலக நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் ஆதார் அட்டை நகலுடன் கொடுத்து பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Tags : farm ,KVK ,
× RELATED தும்மனட்டி பண்ணையில் ஸ்ட்ராபெரி பழங்கள் சாகுபடி