சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு இங்கிலாந்து நிறுவனம் உயர்நிலை தர அங்கீகாரம்

தஞ்சை, பிப். 25: தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் 12 பொறியியல் படிப்புகளுக்கு இங்கிலாந்தின் ஐஇடி எனும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தால் உயர்ந்தபட்ச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் கும்பகோணத்தில் உள்ள சாஸ்த்ராவின் நிவாச ராமானுஜன் மையத்தில் நடத்தப்படும் படிப்புகளுக்கும் பொருந்தும். இங்கிலாந்தை சேர்ந்த ஐஇடி நிறுவனத்தின் அங்கீகாரம் என்பது உலக அளவில் தர நிர்ணயத்துக்கு பெயர் பெற்றதாகும் என்று பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர். சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் தஞ்சை மற்றும் கும்பகோணம் வளாகங்களுக்காக 2015ம் ஆண்டு ஐஇடியின் அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்திருந்தது. இதைதொடர்ந்து இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

முன்னதாக சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக பார்வையிட வந்த ஐஇடி குழு தலைவர் ரிச்சர்டு மூர்லிங் கூறியதாவது: சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தர நிர்ணயத்தை எதிர்கொள்ள மேற்கொண்டு அணுகுமுறை ஐஇடி குழுவை கவர்ந்தது. சாஸ்த்ராவின் தலைமைக்குழு தனது மாணவர்களுக்கு அகில உலக தரத்தில் கல்வி வழங்க மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். 12 படிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக ஐஇடி அங்கீகாரத்தின் சாஸ்த்ரா ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

Related Stories: