ராமநாதபுரத்தில் இருந்து குடந்தைக்கு மேய்ச்சலுக்காக இடம் பெயர்ந்த செம்மறி ஆடுகள் கூட்டம்

கும்பகோணம், பிப். 25: கோடை காலம் துவங்குவதையொட்டி ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சை மாவட்டத்துக்கு மேய்ச்சலுக்காக செம்மறி ஆடுகள் அழைத்து வரப்பட்டுள்ளது.ராமநாதபுரம், பெரம்பலூர் மாவட்டங்களில் பெரும்பாலும் செம்மறி வளர்க்கும் தொழில் தான் பிரதானம். ஆனால் அந்த பகுதியில் போதிய தண்ணீர் இல்லாமலும், புல், மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் போனதால் ஆடுகள் இரை கிடைக்காமல் இறந்து போகும்.பொதுவாக ஆடுகள் இறை திண்று கொண்டே இருக்கும். ஆனால் ராமநாதபுரம், பெரம்பலூர் மாவட்டங்களில் போதிய இரை கிடைக்காது.தற்போது கோடை காலம் தொடங்குவதை முன்னிட்டு தஞ்சை மாவட்ட பகுதிக்கு மேய்ச்சலுக்காக ராமநாதபுரம், பெரம்பலூர் பகுதியில் இருந்து செம்மறி ஆடுகள் அழைத்து வரப்பட்டுள்ளது. சம்பா அறுவடை முடிந்த பின் அடுத்த சாகுபடிக்கு முன்னதாக வயலை கொஞ்ச காலம் காற்றாட போட்டு வைக்கும்போது அந்த நிலத்தில் ஆடு, மாடு கிடை போட்டால் வயலுக்கு சத்தான உரம் கிடைப்பதோடு மண் வளமும் மேம்படும்.காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி செய்த பிறகு ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை 3 மாதங்களுக்கு வயலை ஆறப்போடுவது உண்டு. அந்த காலகட்டத்தில் ராமநாதபுரம், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளை மந்தை மந்தையாக லாரிகளிலும், சில நேரம் மேய்ச்சல் விட்டு கொண்டும் வருவர்.

தஞ்சை, கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் ஆங்காங்கே தங்கி பகலில் ஆடுகளை மேய்க்கும் தொழிலாளர்கள் இரவு நேரத்தில் வயல்களில் பட்டி போடுகிறார்கள். ஆடுகள் வெளியே செல்லாத வகையில் வட்டமாக வலைவிரித்து அதற்குள் ஆடுகளை அடைத்து விடுகின்றனர். இப்படி பட்டியில் ஆடுகளின் சிறுநீரும் புழுக்கைகளும் வயலுக்கு அப்படியே கிடைக்கிறது. இதனால் பட்டி அடைக்கப்பட்ட வயலுக்கு இயற்கையான உரம் கிடைத்து விடுகிறது. இதனால் வரும் குறுவை சாகுபடிக்கு தேவையான இயற்கை உரம், நிலத்துக்கு கூடுதலான சத்துக்கும் கிடைக்கிறது.கிராமத்தில் உள்ள விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் வயல்களில் ஆடுகளை இயற்கை உரத்துக்காக ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுவதை குறிக்கோளாக வைத்துள்ளனர். ஆண்டுக்கு ஒரு முறை ஆடு கிடை போட்டால் அந்தாண்டு முழுவதும் அதன் பலன் கிடைக்கும். இதற்காக வயலில் ஒரு நாள் அடைத்து வைப்பதற்கு ஒரு ஆட்டுக்கு ரூ.2 வரை வயல் உரிமையாளர்களிடமிருந்து தொழிலாளர்கள் பெற்று கொள்கின்றனர்.

Related Stories: