×

நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தல் கவுரவ ஊக்கத்தொகை பெறும் உழவர் கடன் அட்டை பெற விவசாயிகளுக்கு அழைப்பு

வலங்கைமான், பிப்.25: பிரதம மந்திரி விவசாயிகள் கவுரவ ஊக்கத்தொகை பெறும் விவசாய பயனாளிகளுக்கு வேளாண் துறை மூலம் உழவர் கடன் அட்டை பெற்று பயனடைய வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்ரமணியன் அழைப்பு விடுத்துள்ளார்.விவசாயிகள் வங்கியில் கடன் அட்டை பெற்று அதன் மூலம் பயன்பெறுவதை உறுதி செய்யும் வகையில் கிசான் கிரிடிட் கார்டு எனும் தேசிய உழவர் கடன் அட்டையை அனைத்து விவசாயிகளும் பெறுவற்கு வேளாண்மை துறை மூலம் வலங்கைமான் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் முனைப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

வலங்கைமான் வட்டாரத்தில் உள்ள 15 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 753 ஆகும். இதில் கிசான் கிரிடிட் கார்டு தொடங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 73 ஆகும். இவர்களில் 2,680 பேர் இதுவரை உழவர் கடன் அட்டை பெறவில்லை. இவர்கள் இவ்வியக்கம் மூலமாக கடன் அட்டை பெறுவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ள விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல் மற்றும் 2 புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் தாங்கள் வங்கி கணக்கு வைத்துள்ள வங்கி அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியினை அணுகி கிசான் கிரிடிட் கார்டு பெற்று பயன் பெற வேண்டும் என வலங்கைமான் வட்டார விவசாயிகளை வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்ரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Executive Meeting Inviting Farmers ,
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...