×

பாதுகாப்பு தினத்தில் தகவல் பண்பாட்டின் பன்முகத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும் உலக தாய்மொழி தின விழாவில் பேச்சு

மன்னார்குடி, பிப்.25: பண்பாட்டின் பன்முகத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும் என உலகத் தாய்மொழி தினத்தையொட்டி மன்னார்குடியில் நடைபெற்ற விழாவில் கலை இலக்கிய பெருமன்ற பொதுச் செயலாளர் முனைவர் காமராசு பேசினார்.தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மன்னை கிளையின் சார்பில் உலகத் தாய்மொழி தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கலை இலக்கியப் பெருமன்ற கிளை தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் செல்வராசு, மாவட்ட தலைவர் அண்ணா துரை, செயலாளர் சந்திரசேகரன், துணைச் செயலாளர்கள் முரளி, அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற பொதுச் செயலாளர் மேலவாசல் காமராசு பேசுகையில், உலகின் எந்த மொழிகளையும் பேசும் மக்களின் பண்பாடும், பன்முகத் தன்மையும் காக்கப்பட வேண்டும். தாய்மொழிக்கான உரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும். ஏனென்றால் ஒருவரின் தாய்மொழிதான் அவரின் வாழ்வு முழுமைக்குமான விழியாகவும் இருக்கிறது என பேசினார்.

மேலும் முன்னாள் எம்எல்ஏ வை.சிவபுண்ணியம், மாவட்ட கவுன்சிலர் சுஜாதா, கவிஞர் சிவக்குமார், காந்தி லெனின், நேருதாசன், தமிழாசிரியர் கலை பாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.முன்னதாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மன்னை கிளை செயலாளர் தங்கபாபு வரவேற்றார். முடிவில் கிளை பொருளாளர் கோபால் நன்றி கூறினார்.

Tags : World Mother's Day Ceremony ,
× RELATED முத்துப்பேட்டை அருகே தென்னங்கன்றுகளுக்கு தீ வைத்தவருக்கு கத்திக்குத்து