×

நபி உதய தினவிழா

திருச்சி, பிப்.25: திருச்சி அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் உத்தம நபி உதயதின விழா நடந்தது.இஸ்லாமிய கல்வித்துறை இயக்குநர் காதர் பக்க்ஷ் ஹுசைன் சித்திக் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சுஹாஷினி எர்னெஸ்ட் வரவேற்றார். பொருளாளர் அப்துல்மஜீத், முதுகலை மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஷேக் முஹம்மது, நத்தர்ஷா தர்கா அறங்காவலர் டாக்டர் அலீம் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் இதயத்துல்லா, கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் அல்ஹாஜ் எம்.ஒய். ஹபிபுல்லா, ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சையது ஜாபர், அய்மான் மகளிர் கல்லூரி முன்னாள் தாளாளர் ஷாகுல் ஹமீது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி மாவட்ட செயலாளர் ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருச்சி எம்பி., திருநாவுக்கரசர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், புத்தகம், காசோலைகளை வழங்கி பேசினார்.தாசில்தார் அம்சத் இப்ராஹிம், ராஜா ஓட்டல் உரியையாளர் கமால்முஸ்தபா, ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் மன்சூர், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவிந்தராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், சந்திரன், பேராசிரியர் கமாலுதீன், அய்மான் சர்புதீன், துவரங்குறிச்சி ஹபீபு மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர். கல்லூரி துணை முதல்வர் பஹமிதா தப்ஸிம் நன்றி கூறினார்.

Tags : Prophet ,Udayanah Festival ,
× RELATED ‘மிஃராஜ்’ எனும் விண்ணேற்றம்