×

டிரம்பின் வருகையால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மீண்டுவிடுமா?

திருச்சி, பிப்.25: டிரம்பின் வருகையால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்து மீண்டுவிடுமா என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைபடுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும். தமிழக முதல்வர் நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்.பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சிறுமிக்கு எதிரான பாலியல் வன்முறைகள் இவற்றையெல்லாம் கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த நாளை சிறுமிகளின் பாதுகாப்பு நாளாக அறிவித்தால் மட்டும் போதாது அதை நடைமுறைப்படுத்த வேண்டும். டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிப்போம் என்று அறிவித்த முதல்வர் வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை உரிமைகளை ரத்து செய்வதற்கு எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப் போவதில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை மீண்டும் தமிழக அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது தமிழக அரசு விடுதலை சிறுத்தை கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது. பெண்கள். தலித்துகள் வன்கொடுமைகளை டாப் 10 வரிசையில் தமிழகம் இடம்பெற்றிருக்கிறது. டிரம்ப்பின் வருகையால் தமிழ்நாட்டுக்கு இந்தியாவுக்கு என்ன லாபம். அவர் வருவதால் குடிசைகளை மறைக்கக்கூடிய நடவடிக்கையில் அரசு ஈடுபட்டிருக்கிறது. டிரம்பின் வருகையால் இந்திய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டுவிடுமா என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நாங்கள் நல்ல நம்பிக்கை நம்பகத்தன்மை உரியவர்களாக இருப்பதற்கு மோடி காட்டுகிறார். இந்திய பொருளாதாரம் இதனால் வீழ்ச்சிலிருந்து மீளப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : downturn ,Indian ,arrival ,Trump ,
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்